அஜித்துடன் மோத தயாராகும் ஏ.ஆர்.முருகதாஸ்
அஜித்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்த ‘தீனா’ படம் வெளிவந்து 16 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் இருவரும் விரைவில் இணைய வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன.
இந்நிலையில் இருவரும் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆம் அஜித் நடித்து வரும் ‘அஜித் 57’ படமும் முருகதாஸ் இயக்கி வரும் ‘மகேஷ்பாபு’ படமும் ஒரே நாளில் அதாவது வரும் ரம்ஜான் திருநாளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்துக்கு மகேஷ்பாபு போட்டியில்லை என்றாலும் முருகதாஸ் படம் என்பதால் தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளிவந்தால் கடும்போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் 57, மகேஷ்பாபு 23 ஆகிய இரண்டு படங்களுமே தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு உள்ளது என்பதும், பிப்ரவரி இறுதியில் இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.