அஜீத்தின் என்னை அறிந்தால் திரைப்படமும், ஷங்கரின் ‘ஐ’ திரைப்படமும் ஒரே நேரத்தில் ரிலீஸானால் இரு படங்களுக்குமே வசூல் பாதிக்கும் என்பதால் ஏதாவது ஒரு படத்தை சில நாட்கள் இடைவெளியில் வெளியிட கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் நேற்று வரை எந்தவித முடிவு எட்டப்படாமல் இருந்த நிலையில் இன்று இரு தரப்பினர்களும் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.
அதன்படி ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆவது என்றும், அதன்பின்னர் ஆறு நாட்கள் இடைவெளி விட்டு அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை ரிலீஸ் செய்வதும் என்றும் இருதரப்பில் இருந்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் ‘ஐ’ படத்தை ஆறு நாட்களில் ரிலீஸ் செய்து பெரும்தொகையை வசூல் செய்துவிட வேண்டும் என்பதே தயாரிப்பாளரின் திட்டம். ஷங்கரின் மீது அஜீத்துக்கும் ஒரு மரியாதை உள்ளதால் இந்த உடன்பாட்டிற்கு அஜீத் தரப்பும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது