திருப்பதியில் அஜீத் தம்பி திருமணம்? ராதாரவி வாழ்த்து

vidharthகவுதம் மேனன் இயக்கிய முதல் படமான மின்னலே படத்தில் அறிமுகமான நடிகர் விதார்த் அதன்பின்னர் பிரபுசாலமன் இயக்கிய மைனா படம் மூலம் பிரபலம் ஆனார். கடந்த வருடம் வெளிவந்த வீரம் படத்தில் அஜீத்தின் தம்பிகளில் ஒருவராக நடித்த விதார்த் ஜன்னல் ஓரம், காடு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விதார்த்துக்கும் மற்றும் பழனியை சேர்ந்த வழக்கறிஞர் சிவானந்தம் என்பரின் மகள் காயத்திரி தேவிக்கும் திருமண நிச்சயம் கடந்த மே மாதம் 4ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்துடன் திருப்பதியில் விதார்த் திருமணம் சிறப்பாக இன்று காலை நடந்து முடிந்தது.

விதார்த்தின் திருமணத்திற்கு நடிகர் ராதாரவி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதைத் தொடர்ந்து சென்னையில் வரும் 17ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டு வாழ்த்துகள் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply