கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் தல 55 படத்தில் பைக் சேஸிங் காட்சி வைக்கவேண்டும் என்று இயக்குனர் பிடிவாதமாக இருப்பதால் அஜீத்துக்கும் இயக்குனருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.
அஜீத் மற்றும் அனுஷ்கா நடிக்கும் தல 55 திரைப்படத்தில், அஜீத் நடிக்கும் பைக் சேஸிங் காட்சி ஒன்றை இடையில் புகுத்தியுள்ள்தாக கூறப்படுகிறது. தன்னிடம் கதை சொல்லும்போது இப்படியொரு காட்சி இல்லையே, தற்போது திடீரென பைக் சேஸிங் காட்சி எதற்கு என்று அஜீத் கேட்டதாகவும், அதற்கு கவுதம் ஒருசில விளக்கங்கள் கூறி அவரை சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பைக் சேஸிங் காட்சியை வெளிமாநிலத்தில் போக்குவரத்து இடைஞ்சல் இல்லாத இடத்தில் வைத்துக்கொள்ளலாம் என அஜீத் கூறியபோது, அதை கவுதம் மேனன் ஏற்றுக்கொள்ளவில்லை. பைக் சேஸிங் காட்சிகளை நந்தனம் மற்றும் அண்ணா சாலையில்தான் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்று அவர் பிடிவாதமாக உள்ளார். பிசியான அண்ணா சாலையில் அஜீத் படத்தின் படப்பிடிப்பு நடத்தினால் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதால் அஜீத் மறுத்து வருகிறார். இந்த விஷயத்தில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.