சிலை வைப்பது அஜித்துக்கு சுத்தமாக பிடிக்காது: பிரபல இயக்குனர்
கடந்த சில நாட்களாக அஜித்துக்கு சிலை வைப்பதில் அவரது ரசிகர்கள் தீவிர முயற்சியில் உள்ளனர். ஆனால் அஜித் இதை சிறிதும் விரும்ப மாட்டார் என்றும் சிலை வைக்கும் பணத்தில் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யலாம் என்றும் அஜித்துக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அஜித்தின் ‘விவேகம்’ பட இயக்குனர் சிவா, ‘சிலை வைப்பது அஜித்துக்கு சுத்தமாக பிடிக்காது. அவர் இதை விரும்பவே மாட்டார். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ரசிகர்களாக இருக்கட்டும், படம் பார்க்க வருபவர்களாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் அஜித் சொல்வது ஒன்றே ஒன்று தான். அம்மா, அப்பா, செய்யும் தொழில் அது தான் முக்கியம். அது போக தான் மற்ற அனைத்தும் என்று அவர் அடிக்கடி கூறுவார். தன்னுடைய படங்கள் மட்டுமின்றி நல்ல படங்கள் யாருடையதாக இருந்தாலும், திரையரங்கில் போய் பார்த்து சந்தோஷமடைந்து, அதிலிருக்கும் நல்ல விஷயங்களை தங்களுடைய வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என்பது மட்டுமே அஜித்தின் அறிவுரையாக இருக்கும். இந்த மாதிரி சிலை வைப்பதில் அவருக்கு கண்டிப்பாக உடன்பாடு இருக்காது’ என்று கூறினார்.
இன்று கும்பகோணத்தில் அஜித்துக்கு சிலை வைக்கவுள்ளதாகவும், சில நாட்கள் முன்பு நெல்லையில் அஜித்துக்கு சிலை வைக்க அடிக்கல் நாட்டப்பட்டதாக செய்தி வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது