‘வேதாளம்’ படத்தில் அஜீத்துக்கு இரட்டை வேடமா? இதுவரை வெளிவராத புதிய தகவல்
தல அஜீத் நடித்து வரும் ‘வேதாளம்’ படத்தின் படப்பிடிப்பு இந்த வார இறுதியுடன் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதுவரை வெளிவராத இந்த படத்தின் தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. இதுவரை இந்த படத்தில் அஜீத் ஒரே வேடத்தில் மூன்று கெட்டப்புகளில் வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அஜீத் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
அஜீத் கடைசியாக கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘அசல்’ படத்தில்தான் இரண்டு வேடங்களில் நடித்தார். தற்போது ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் ‘வேதாளம்’ படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளதாகவும் இரண்டாவது வேடத்தை இதுவரை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
அஜீத்தின் இரண்டாவது வேட கேரக்டர் பிளாஷ்பேக்கில் மட்டும் வருவதாகவும், இந்த கேரக்டருக்கு ஜோடியே இல்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், சூரி, தம்பிராமையா, ராகுல்தேவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அனிருத்தின் இசையமைப்பில் ஏ.எம்.ரத்னம் அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் தீபாவளி தினத்தில் வெளிவரவுள்ளது.
மேலும் இந்த படத்தின் டீசர் வரும் 8ஆம் தேதியும், பாடல் வெளியீடு வரும் 16ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.