கவுதம் மேனன் தற்போது இயக்கி வரும் அஜீத் 55 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அஜீத்- த்ரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகளை இயக்கி வரும் கவுதம் மேனன், தினசரி படப்பிடிப்பை இரவுநேரத்தில் வைத்துள்ளார். இரவு காட்சிகள் சம்மந்தப்பட்ட படப்பிடிப்பு என்பதால் அஜீத்தும், த்ரிஷாவும் அவருக்கு முழு அளவில் ஒத்துழைப்பு கொடுத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
படப்பிடிப்பின் இடையே அஜீத்தும், அருண் விஜய்யும் இரவு உணவை தயார் செய்து த்ரிஷா உள்பட அனைவருக்கும் பரிமாறி வரும் சம்பவமும் நடந்துள்ளது. இதுகுறித்து த்ரிஷா தனது டுவிட்டரில் குறிப்பிடும்போது, ‘அஜீத்தும், அருண் விஜய்யும் திகட்டதிகட்ட இரவு விருந்து பரிமாறினர். அவர்களுடைய விருந்தோம்பலால் நான் திக்குமுக்காடிவிட்டேன். மேலும் அஜீத்துடன் நடித்துக்கொண்டிருந்தால் இரவு தூக்கத்தையே நான் மறந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்த படத்தில் அஜீத், த்ரிஷாவுடன் அருண் விஜய், அனுஷ்கா, மற்றும் பலர் நடிக்கின்றனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டான் மகார்துர் என்பவர் கேமராமேனாக பணிபுரிகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.