அஜீத்துக்கு சொத்து முழுவதையும் கொடுக்க தயார். கேன்சர் சிறுமியின் தந்தை நெகிழ்ச்சி
அஜீத்தை பற்றி விமர்சனம் செய்யும் பலர், அவரை ஒரு நல்ல நடிகர் என்று சொல்வதை விட, மனிதநேயமுள்ள நல்ல மனிதர் என்றே பலரும் கூறுவர். அந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை நிறைந்தவர் அஜீத். உதவி செய்வதற்கு என்று ஒரு அளவுகோல் வைத்து கொள்ளாமல் உதவி செய்வது மட்டுமின்றி, தான் செய்த உதவியை விளம்பரப்படுத்தும் எண்ணமும் இல்லாதவர். ஒரு டியூப் லைட் நன்கொடையாக கொடுத்துவிட்டு அந்த லைட் முழுவதிலும் தன்னுடைய பெயரை எழுதி விளம்பரப்படுத்தி கொள்ளும் உலகில் அஜீத்தின் வித்தியாசமான கொள்கை அனைவரையும் கவர்வதில் வியப்பில்லைதானே!
இந்நிலையில் மூன்று வருடங்களுக்கு முன்னர் அஜீத் செய்த மிகப்பெரிய உதவி ஒன்று தற்போது வெளியே தெரிந்துள்ளது. தன்னுடைய படத்தை கையில் டாட்டுவாக வரைந்த ஒரு சிறுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்து, உடனே அந்த சிறுமியின் தந்தையை அழைத்து, சிகிச்சைக்கு தேவையான ரூ.25 லட்சம் பணத்தை அஜீத் கொடுத்து உதவியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டதாகவும், உதவி செய்ததை விளம்பரம் செய்து புகழ் பெறும் வழக்கம் அஜித்துக்கு இல்லாததால், இதுவரை இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அஜித்திடம் உதவி பெற்ற அந்த சிறுமியின் தந்தை ‘அஜித் தனது மகளின் சிகிச்சைக்கு ரூ.25 லடசம் கொடுத்து உதவி செய்ததை தற்போது டுவிட்டரில் கூறியுள்லார். மேலும் தான் அந்த நேரத்தில் மிகவும் வறுமையில் இருந்ததாகவும், ஆனால் இப்போது அஜித் கேட்டால், தன்னுடைய சொத்து முழுவதையும் அஜித்துக்கு கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் டுவிட்டரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.