அஜித்தின் ‘விவேகம்’ ரிலீஸ் தேதி இதுதான்
‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய வெற்றி படங்களை அடுத்து மீண்டும் கூட்டணி சேர்ந்த அஜித்-சிவா தற்போது ‘விவேகம்’ படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 80% முடிந்துவிட்ட நிலையில் வரும் மார்ச் 2ஆம் தேதி இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் அனைவரும் பல்கேரியா செல்லவுள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படத்தயாரிப்பு நிறுவனம் கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி அல்லது 24ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாம். இந்த இரண்டு தேதிகளில் எந்த தேதி என்பதை படக்குழு இறுதி செய்து இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கவுள்ளது.
அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் டீசர் வரும் மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் வெளியாகும் என தெரிகிறது.