அஜீத் மட்டுமே அடுத்த ரஜினிக்கு தகுதியானவர். பிரபல தயாரிப்பாளர் பேட்டி
தல அஜீத் ஒரு மாஸ் நடிகர் மட்டுமின்றி நல்ல மனிதநேயம் மிக்கவர் என்பதால் அவரை திரையுலகிலும் சரி, வெளியுலகிலும் சரி பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் பிறருடன் பழகுவதிலும், மற்றவர்களுக்கு உதவுவதிலும், செய்த உதவிக்கு விளம்பரம் தேடாமல் இருப்பதிலும் பெயர் பெற்று விளங்குகிறார்.
திரையுலகின் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் இருக்கும் நிலையில், ரசிகர்களின் மனதில் என்றும் ஒரு சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் அஜீத் குறித்து பிரபல கன்னட தயாரிப்பாளர் கே.மஞ்சு அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியபோது, “தமிழ் திரையுலகின் கடந்த சில தலைமுறைக நடிகர்களை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இதில் நான் புரிந்து கொண்ட ஒரு விஷயம் என்னவெனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒரு நடிக்கின்றார் என்றால் அவர் அஜீத் ஒருவர் மட்டுமே என்று என்னால் உறுதியாக கூறமுடியும் என்று கூறியுள்ளார்.
மேலும் கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரையில் அஜீத் மட்டுமே அடுத்த ரஜினியாக கருதப்படுகிறார். அஜீத்தின் படங்களுக்கு கர்நாடகத்தில் ரஜினியின் படங்களுக்கு இணையான வரவேற்பு உள்ளது’ என்று கூறியுள்ளார்.