ஹாலிவுட் ரீமேக் படத்தில் அஜீத்? பரபரப்பான புதிய தகவல்

ஹாலிவுட் ரீமேக் படத்தில் அஜீத்? பரபரப்பான புதிய தகவல்
ajith
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த ‘யட்சன்’ திரைப்படம் ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களில் இருந்தும் தூக்கப்பட்டுவிட்டதால், இயக்குனர் விஷ்ணுவர்தன் அதிர்ச்சி அடைதுள்ளார். படத்தில் ‘தல’ பெயரை பயன்படுத்தியும் எடுபடாததால், அடுத்த படத்தை தல’யை வைத்தே இயக்க முடிவு செய்துள்ளாராம்.

ஆனால் இம்முறை வித்தியாசமான களத்தில் ‘தல’யுடன் அவர் பயணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் பெரும் வசூலை குவித்த கார் ரேஸ் படம் ஒன்றினை தமிழில் ரீமேக் செய்ய முடிவு எடுத்துள்ளராம். இதுகுறித்து சமீபத்தில் அஜீத் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர் ஆகியோர்களுடன் விஷ்ணுவர்தன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் திரைக்கதை கார் ரேஸ் குறித்து அமைந்துள்ளதால், உண்மையான கார் ரேஸ் வீரரான அஜீத் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றும், மேலும் இந்த படம் நெகட்டிவ் ஹீரோ சப்ஜெக்ட் என்பதால் அஜீத்துக்கு மிகப்பொருத்தமாக இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹீரோயின், பாடல்கள் இல்லாமல் ஹாலிவுட் ஸ்டைலில் ஒன்றரை மணி நேரத்தில் இந்த படம் அமையும் வகையில் உருவாக்க போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Reply