என்னை அறிந்தால் படத்தில் நடித்து முடித்துள்ள அஜீத், உடனே தனது படத்தை ஆரம்பிப்பார் என்று கருதப்பட்டது. இதற்காக சிறுத்தை சிவாவுடன் அவர் பேசி வருவதாகவும், வரும் பிப்ரவரி முதல் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் அஜீத்தின் மனைவி ஷாலினி கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் குழந்தை பிறக்கவுள்ளது. இதனால் மனைவியை அருகில் இருந்து கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்காக அஜீத் தனது அடுத்த படத்தை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அஜீத் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இந்த கேப்பில் அஜீத் தனது செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையையும் செய்து முடிக்க முடிவு செய்துள்ளார். அஜீத்தின் அடுத்த படத்தையும் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கின்றார் என்பதும், அந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார் என்பதும் ஏற்கனவே அனைவரும் அறிந்ததே.