அஜித்சிங் புகாரால் ஹேமாமாலினியின் வாட்டர் பில்டருக்கு ஆபத்து.

hemamalini

அஜீத்சிங் கட்சியின் ராஷ்டிரிய லோக் தளம் இன்று தேர்தல் கமிஷனில் ஹேமாமாலினி நடித்த வாட்டர் ஹீட்டர் விளம்பரத்தை தடை செய்யும்படி ஒரு புகார் அளித்துள்ளது.

அஜீத் சிங் மகனும், பாலிவுட் நடிகை ஹேமாமாலினியும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா தொகுதியில் மோதுகின்றனர். இந்த தொகுதியில் போட்டியிடும் அஜீத் சிங் மகன் ஜெயந்த் செளத்ரி, இன்று தேர்தல் கமிஷனில் அளித்துள்ள புகாரில் ‘ஹேமாமாலினி நடித்த வாட்டர் ஹீட்டர் விளம்பரம் அனைத்து டிவி சேனல்களிலும் அடிக்கடி வெளியாகிறது. பத்திரிகைகளிலும் தினந்தோறும் விளம்பரம் வருகிறது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல். இந்த விளம்பரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அல்லது இந்த விளம்பர செலவுகளை வேட்பாளரின் செலவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பாரதிய ஜனதா கட்சியினர், ஹேமாமாலினியின் விளம்பரப்படத்திற்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. இப்படியே போனால் ஹேமாமாலினி நடித்த படங்களையெல்லாம் தடை விதிக்க அஜீத்சிங் கட்சியினர் கேட்பார்கள் போல் உள்ளது என கூறியுள்ளனர்.

Leave a Reply