வரும் பொங்கல் திருநாளில் மோதும் தல-தளபதி ரசிகர்கள்
விஜய் டிவி நடத்தும் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் படப்பிடிப்பு நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சி வரும் பொங்கல் திருநாளான ஜனவரி 15ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித், விஜய் ரசிகர்கள் காரசாரமாக மோதிய இந்த நிகழ்ச்சி இருதரப்பு ரசிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் வெள்ளம் குறித்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்காக இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியின் இடையே ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் அதிகளவில் புக் ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது. தல-தளபதி ரசிகர்கள் மோதும் இந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சியை நீங்களும் உங்கள் வீட்டு வரவேற்பரையில் இருந்து பார்த்து ரசிக்க தயாராகுங்கள்