விஜய்க்கு ரஜினி வில்லன், விக்ரமுக்கு அஜித் வில்லன்
விஜய் நடிக்கவுள்ள 60வது படத்தில் ‘லிங்கா’ படத்தின் வில்லன் நடிகர் ஜெகபதிபாபு நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்தில் நடித்த நடிகர் மகேஷ் மஞ்ச்ரேக்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அரிமாநம்பி இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘இருமுகன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் வரும் ஏப்ரல் 1 முதல் விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படமான ‘கருடா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
தீராத விளையாட்டு பிள்ளை, சமர் உள்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் திரு இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க மகேஷ் மஞ்ச்ரேக்கரும், விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படத்திற்காக சென்னை அருகே 100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருவதாகவும், இந்த படத்தில் விக்ரமுக்கு இதுவரை இல்லாத வகையில் வித்தியசமான கெட்டப்பில் தோன்றுவார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Chennai Today News: Ajith villan goes to Vikram