அஜீத் மனைவி ஷாலினி மீண்டும் கர்ப்பம். 2 வது குழந்தையை வரவேற்க தயாராகும் தல..

shalini ajith pregnant

கடந்த 1993ஆம் ஆண்டு ‘அமராவதி’ என்ற படத்தின் மூலம் தமிழில்அறிமுகமானவர் அஜீத். இந்த படத்தை தொடர்ந்து அஜீத் நடித்த ‘காதல் கோட்டை’, ‘காதல் மன்னன்’, ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘தீனா’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘வில்லன்’, ‘அட்டகாசம்’, ‘வரலாறு’, ‘கீரிடம்’, ‘பில்லா’, ‘அசல்’, ‘மங்காத்தா’, ‘பில்லா 2’, ‘வீரம்’ உள்பட பல படங்கள் கோலிவுட்டில் பெரும் வசூல் படைத்து சாதனை பெற்றது.

கடந்த 2000ஆம் ஆண்டில்’அமர்க்களம்’ படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அஜீத்துக்கு 4 வயதில் அனோஷ்கா என்ற மகள் இருக்கிறார்.

இந்நிலையில் அஜீத் மனைவி ஷாலினி மீண்டும் கர்ப்பமாகியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஒன்று கூறுகிறது. இந்த சந்தோஷமான தகவலை அஜீத், கெளதம் மேனனுடனும் தனது படக்குழுவினர்களுடனும் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கும் அஜீத், தனது மனைவி ஷாலினியை மிகவும் கவனமுடன் கவனித்து வருகின்றாராம்.

அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பிஸியாக நடந்து வந்தாலும், கர்ப்பிணி மனைவியை கவனிப்பதில் அஜீத் மிகுந்த அக்கறை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அனேகமாக அஜீத்தின் அடுத்த  திரைப்படமும், அவருடைய அடுத்த குழந்தையும் ஒரே நேரத்தில் ரிலீஸாகும் வாய்ப்பும் உள்ளதாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply