அனிருத்தின் தரை லோக்கலுக்கு பட்டையை கிளப்பிய அஜீத்?
இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் தரலோக்கல் பாடலுக்கு இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கின்றது என்பதை சமீபத்தில் வெளியான ‘தனுஷின் ‘மாரி’ படத்தில் இருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த பாடலுக்கு பின்னர் தரலோக்கல் ஸ்பெஷலிஸ்டாக அனிருத் மாறிவிட்டார் என்றே கோலிவுட் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அஜீத்தின் ‘வேதாளம்’ படத்திலும் ஒரு தரலோக்கல் பாடலை அனிருத் கம்போஸ் செய்துள்ளதாகவும், இந்த பாடலின் வேகத்திற்கேற்ப அஜீத் செம டான்ஸ் ஒன்று ஆடியிருப்பதாகவும் இந்த பாடலுக்கு நடனப்பயிற்சி அமைத்த ஷோபி மாஸ்டர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த தகவல் அஜீத் ரசிகர்களை துள்ளி எழ வைத்துள்ளது.
ஏற்கனவே . ‘என்னை அறிந்தால்’ படத்தில் இடம்பெற்ற ‘அதாரு அதாரு உதாரு உதாரு’ பாடலுக்கு பட்டையை கிளப்பிய அஜீத், இந்த படத்தின் தரலோக்கல் பாடலிலும் நிச்சயம் தூள் கிளப்பியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலை திரையில் காண அஜீத் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.