அஜீத்தின் அடுத்த படமான ‘தல 56′ திரைப்படத்தின் பூஜை இன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றது. இந்த தொடக்கவிழா பூஜையில் தல 56’ படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் சிறுத்தை சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வியாழக்கிழமை இதே சாய்பாபா கோவிலில்தான் ‘என்னை அறிந்தால்’ படத்தின் பூஜை நடைபெற்றது. மிகச்சரியாக ஒரு வருடம் முடிந்த நிலையில் அதே ஏப்ரல் 9ஆம் தேதியான இன்று ‘தல 56’ படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘என்னை அறிந்தால்’ பூஜை நாளிலேயே இந்த படத்தின் பூஜையும் போடப்பட்டுள்ளதால் அதே வெற்றியை மீண்டும் கொடுக்க வேண்டும் என அஜீத் உள்பட படக்குழுவினர் அனைவரும் தங்களுக்கு தாங்களே சவால் விட்டுக்கொண்டதாக கோலிவுட் செய்திகள் கூறுகின்றன.
அஜீத் தற்போது குட்டித்தல’யின் பெயர் சூட்டும் விழாவை நடத்துவதில் மும்முரமாக இருப்பதாகவும், அதன்பின்னர் அவர் தல 56′ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் விஜய், அஜீத் ஆகிய இரண்டு பெரிய ஸ்டார்களுடன் ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.