அஜீத்-ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் பெயர் வைக்கவில்லை என்ற ஆதங்கம் அவரது ரசிகர்களிடையே கடந்த சில நாட்களாக இருந்தது. இதுவரை குட்டித்தல’ என்று செல்லமாக அழைத்து அனைவரும் இனிமேல் அவரது ஒரிஜினல் பெயரை அழைத்து கூப்பிடலாம். ஆம் அஜீத் மகனுக்கு பெயர் சூட்டப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆத்விக்’ என்பதுதான் அஜீத் மகனின் பெயர். ஆத்விக் என்றால் ஒற்றுமை என்று பொருள்படும் என கூறப்படுகிறது. ஒற்றுமைக்கு இலக்கணமாக வாழ்ந்து வரும் அஜீத்-ஷாலினி தம்பதிக்கு பிறந்த குட்டித்தல’க்கு இந்த பெயர் மிகவும் பொருத்தமானதுதான் என அவரது ரசிகர்கள் டுவிட்டர், ஃபேஸ்புக்கில் கூறி வருகின்றனர்.
அஜீத்துக்கு ஏற்கனவே அனோஷ்கா என்ற மகள் இருக்கும் நிலையில் கடந்த மாதம் பிறந்த மகனுக்கும் அகர வரிசையிலேயே ஆத்விக் என்ற பெயரை அஜீத் செலக்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆத்விக் என்ற புதிய பெயர் வைக்கப்பட்டுள்ள ஆத்விக் அவர்களுக்கு டுவிட்டரில் வாழ்த்து குவிந்து வருகின்றது என்பது குறிப்ப்பிடத்தக்கது