சென்னை அருகே பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ஏகே 47 துப்பாக்கி குண்டுகள்.
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஏகே47 ரக குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை பூந்தமல்லி பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் அனாதையாக கிடந்த பை ஒன்றில் ஏகே47 ரக 30 குண்டுகள் கேட்பாரற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுகளை போட்டது யார்? என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் காரில் இருந்த பை ஒன்று திருடப்பட்டிருந்ததாகவும், அந்த பையில் செல்போன் மற்றும் தனது பாதுகாவலர் பயன்படுத்தும் ஏகே 47 ரக துப்பாக்கி குண்டுகள் இருந்ததாகவும் தெரிய வந்தது.
காணாமல் போன இந்த துப்பாக்கி குண்டுகள்தான் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் கிடைத்த குண்டுகளா? என்ற சோதனை தற்போது செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.