மேல்சபை எம்.பி. பதவி பெற ரூ.100 கோடி லஞ்சம். மாயாவதி திடுக்கிடும் தகவல்

mayavatiமாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் மேல்சபை எம்.பியாக இருந்த அகிலேஷ் தாஸ் அவர்களுக்கு மீண்டும் மேல்சபையில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் கட்சித்தலைவர் மாயாவதி மீது திடுக்கிடும் பல குற்றச்சாட்டுக்களை கூறிவந்தார்.

இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மாயாவதி, ‘அகிலேஷ் தாஸ் சமீபத்தில் என்னுடைய வீட்டிற்கு வந்து மீண்டும் மேல்-சபை எம்.பி. தேர்தலில் வாய்ப்பு அளித்தால் ரூ.100 கோடி தருவதாக கூறினார். ஆனால் நான், நீங்கள் ரூ.200 கோடி தந்தாலும் உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. கட்சிக்காக உழைப்பவர்களுக்குத்தான் வாய்ப்பு உண்டு என்று கூறி மறுத்து விட்டேன்.

இந்த ஆத்திரத்தில்தான் என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை அகிலேஷ் தாஸ் அள்ளி தெளித்து வருகிறார் என்று கூறியுள்ளார். இதனால் பகுஜன் சமாஜ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply