ஜெயலலிதாவை மிஞ்சிய அகிலேஷ் யாதவ். ஒரே நாளில் 8 அமைச்சர்கள் நீக்கம்

ஜெயலலிதாவை மிஞ்சிய அகிலேஷ் யாதவ். ஒரே நாளில் 8 அமைச்சர்கள் நீக்கம்
akilesh
தமிழகத்தில் அவ்வப்போது அமைச்சர்கள் நீக்கம் நடைபெறுவதை நாம் கடந்த சில வருடங்களாக பார்த்து வருகிறோம். இந்நிலையில் உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் நேற்று ஒரே நாளில் எட்டு அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்துள்ளார். இவருடைய அதிரடி நடவடிக்கை உ.பி மாநிலத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த மாநிலத்தில் மொத்தம் 60 அமைச்சர்கள் உள்ளனர். ஏற்கனவே இந்த மாநிலத்தில் ஆறு துறைகளுக்கு அமைச்சர்களே இல்லாத நிலை இருக்கின்றது. இந்நிலையில், 5 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 3 இணையமைச்சர்களை அதிரடியாக முதல்வர் அகிலேஷ் யாதவ் நீக்கியுள்ளார். முதல்வரின் இந்த உத்தரவால் உ.பி. மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில் தோல்வி போன்ற காரணங்களுக்காக அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். வரும் 31-ம் தேதி அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary: Akhilesh sacks 8 UP ministers, takes away portfolios of 9 others

Leave a Reply