லேப்டாப்புக்கு பதில் ஸ்மார்ட்போன். உ.பி. அரசின் திடீர் மாற்றம் ஏன்?

லேப்டாப்புக்கு பதில் ஸ்மார்ட்போன். உ.பி. அரசின் திடீர் மாற்றம் ஏன்?

akileshகடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த உத்தரபிரதேச அரசு தற்போது லேப்டாபுக்கு பதில் ஸ்மார்ட்போன் வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி விரைவில் உயர்கல்வி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என தெரிகிறது

இதுகுறித்து உ.பி. அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: ‘‘சமாஜ்வாடி ஸ்மார்ட் போன் திட்டம் அரசுக்கும் மக்களுக்கும் இடையில் உதவி புரிவதற்காக கொண்டு வரப்படுகிறது. அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களின் கருத்துக்களை கேட்கவே பயன்படும். இந்த ஸ்மார்ட் போன்கள் அடுத்த ஆண்டு முதலில் வருபர்கள்/பதிவு செய்தவர்கள் அடிப்படையில் இந்த ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும். இந்த போனில் அரசின் திட்டங்கள் குறித்த அப் (APP) இடம்பெற்றிருக்கும். அதன்மூலம் மக்களுக்கு வீடியோ மற்றும் எழுத்து வடிவில் தகவல்கள் அளிக்கப்படும்.

இந்த செல்போன்களை பெறுவோர்கள் உயர்கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களாவும், அவர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவராகவும் இருக்க வேண்டும். அத்துடன் அவரது குடும்பத்தினரின் வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்’’

இவ்வாறு அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply