கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் முதலமைச்சர். உ.பியில் பெரும் பரபரப்பு

கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் முதலமைச்சர். உ.பியில் பெரும் பரபரப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் பதவியில் இருந்து முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள அங்கு அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கும் மும்முரத்தில் உள்ளன. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் முதல்வர் அகிலேஷ் யாதவின் தந்தையுமான முலாயம்சிங் யாதவ் நேற்று 325 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்தனர். ஆனால் இந்த பட்டியலில் அகிலேஷ் ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் 50 பேர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.

இதனால் அதிருதி அடைந்த அகிலேஷ் யாதவ் 235 போட்டி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் இதுவரை மறைமுகமாக இருந்த தந்தை-மகன் குடும்ப சண்டை தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த முலாயம்சிங் , கட்சி விதிமுறை மீறி ஒழுங்கின்றி நடந்து கொண்டததற்காகவும், கட்சியை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டி, முதல்வர் அகிலேஷ் யாதவையும், பொதுச் செயலாளர் ராம்கோபால் யாதவையும் 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்குவதாக முலாயம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். கட்சியின் நலன் கருதி இந்த நடவடிக்கையை தாம் எடுத்ததாகவும் கூறினார். மேலும் புதிய முதல்வரை விரைவில் அறிவிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் உ,.பி. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply