புத்த மதத்திற்கு மாறிவிட்டாரா அக்சராஹாசன்?

புத்த மதத்திற்கு மாறிவிட்டாரா அக்சராஹாசன்?

கமல்ஹாசன் ஆரம்பத்தில் இருந்தே பகுத்தறிவாதியாக இருந்தாலும் அவரது இரண்டு மகள்களும் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருந்தனர் என்பது பல சந்தர்ப்பங்களில் தெரியவந்தது. ஸ்ருதிஹாசன், திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர் என்றும் கூறப்படுவதுண்டு.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன், புத்த மதத்திற்கு மாறிவிட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ‘ ஹாய் அக்ஷூ, நீ மதம் மாறிவிட்டாயா? மதங்களை விட அன்பு, எந்தவித நிபந்தனையும் அற்றது. வாழ்க்கையை அனுபவி’ என்று பதிவு செய்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அக்சராஹாசன், , ‘இல்லை நான் மதம் மாறவில்லை, இப்பொழுது வரை நான் நாத்திகர்தான், இருப்பினும் புத்த மதத்தை நான் வாழ்க்கையின் வழிகாட்டியாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply