இன்று மார்ச் 14- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்:

strange-albert-einsteinஉலகின் மிகச்சிறந்த இயற்பியல் அறிஞர் ஆல்ப்ரட் ஐன்ஸ்டீன், ஜெர்மனியை சேர்ந்தவர். இவர் 1879ஆம் ஆண்டு இதே நாளில் அதாவது மார்ச் 14ஆம் தேதிதான் பிறந்தார். ஜூரிச் பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்ற இவர் நோபல் பரிசு உள்பட பல விருதுகளை வென்றவர்.  1955ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி இந்த விஞ்ஞானியை மரணம் தழுவியது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார்.

இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டீன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது.

Leave a Reply