மது போதை பொருள் அல்ல. சுகாதார அமைச்சர் கருத்தால் சர்ச்சை
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் போதைப் பொருளான மதுவை ஒழிக்க அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து போராடி வரும் நிலையில் பஞ்சாப் மாநில சுகாதார அமைச்சர் மது ஒரு போதைப்பொருளே அல்ல என்று கூறியதால் சர்ச்சைக்குள்ளாகி உள்ளார்.
இன்று பஞ்சாப் தலைநகர் சண்டிகர் நகரில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுர்ஜித் குமார் ஜயனி திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ‘மது ஒரு போதைப்பொருள் அல்ல. என்று கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஒருபுறம் மறுவாழ்வு மையங்களைத் திறப்பதும், மற்றொருபுறம், மது போதைப் பொருள் அல்ல என்று கூறுவதுமான இரட்டை நிலைப்பாட்டை பாரதிய ஜனதா அரசு கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவரான சுனில் ஜக்கார் விமர்சித்துள்ளார்.
மாநில சுகாதாரத்துறை அமைச்சரின் கருத்து, ஷிரோமணி அகாலி தளம் – பாரதிய ஜனதா கூட்டணி அரசின் மனநிலையை பிரதிபளிக்கக்கூடிய வகையில் உள்ளதாக ஆம் ஆத்மி தலைவர் சுச்சா சிங் தெரிவித்துள்ளார்.
English Summary: Alcohol Not An ‘Intoxicant’, Says Punjab Health Minister