வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.7500+மருத்துவ காப்பீடு: அதிரடி அறிவிப்பு
வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.7500 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அது மட்டுமின்றி மருத்துவ காப்பீடும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வழங்கப்படும் என்றும் அல்ஜீரிய அதிபர் அறிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் வேலை இல்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ள நிலையில் வேலையில்லாமல் வறுமையில் வாடும் இளைஞர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அல்ஜீரியா அதிபர் அறிவித்துள்ளார்
வேலை இல்லாதவர்களும் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காக இந்த உதவித்தொகை எனவும் அவர் கூறியுள்ளார்.