ஆன்லைனில் அமோகமாகும் விந்துகள் விற்பனை. சீனாவில் ஒரு அதிர்ச்சி தகவல்

ஆன்லைனில் அமோகமாகும் விந்துகள் விற்பனை. சீனாவில் ஒரு அதிர்ச்சி தகவல்

semenவெளியில் குடும்பத்துடன் சென்று ஷாப்பிங் செய்யும் காலமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது மாறி வருகின்றது. வீட்டில் இருந்தபடியே உட்கார்ந்த இடத்தில் இருந்து தேவையான அனைத்து பொருட்களையும் ஆன்லைனிலேயே வாங்கும் பழக்கம் பொதுமக்களிடையே பரவி வருகிறது. மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்பட டிவி, பிரிட்ஜ் போன்ற பொருட்கள் வரை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும். பொருட்கள் உங்கள் வீட்டை தேடி வரும் நிலை தற்போது உள்ளது. இந்நிலையில் ஆன்லைனில் ஆண்களின் விந்துக்களும் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விற்பனை தற்போது சீனாவில் அமோகமாக நடைபெற்று வருகின்றதாம்.

பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான அலிபாபா நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு இணையதளம், தாய்ப்பாலில் செய்யப்பட்ட சோப் உட்பட, சமூகத்தால் விலக்கப்பட்ட பல வித்தியாசமான பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த இணையதளம் சமீபத்தில் புதிய முயற்சியாக, ஆண்களின் விந்தணுவைக் கேட்டு தனது வலைதளத்தில் விளம்பரம் கொடுத்திருந்தது.

இந்த விளம்பரம் வெளியான 72 மணி நேரத்திலேயே 22 ஆயிரத்து 17 பேர் தங்கள் பெயர், அடையாள அட்டை விவரங்கள் உட்பட முழு விவரங்களையும் கொடுத்து விந்தணு தானத்திற்கான பதிவு செய்துள்ளனர். இதில் 69 சதவீதத்தினர் பீஜிங், ஷாங்காய், குவாங்சு ஆகிய மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்களின் இந்த அமோக வரவேற்பிற்குக் காரணம் குழந்தையில்லாத தம்பதிக்கு உதவ வேண்டும் என்ற விழிப்புணர்வா, அல்லது இதற்காக கிடைக்கும் 500 முதல் 700 டாலர் வரையிலான பணமா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.  சீனாவில் வெற்றிகரமாக ஆன்லைனில் விந்து சேகரிப்பதை அடுத்து உலகெங்கும் இதுபோன்ற முயற்சிகள் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply