ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை. நாசா அறிவிப்பு
ஏலியன்களின் தாக்குதலில் இருந்து பூமியைப் பாதுகாக்க அதிகாரி ஒருவரை நாசா நியமிக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது.
பூமி உள்ள பல கோள்களைப் பாதுகாக்க நாசா மிகவும் மெனக்கெடுகிறது. அதனால், கோள்களைப் பாதுகாக்கும் பணியை கவனிக்க பிரபஞ்ச பாதுகாப்பு அதிகாரி (Planetary Protection Officer) என்று ஒருவரை நியமிக்க இருப்பதாக நாசா அறிக்கை வெளியிட்டுள்ளது.
விண்வெளியில் இருப்பவர்கள் கிரகங்களையும் அவற்றின் துணைக்கோள்களையும் மாசுபடுத்தாமல் கண்காணிப்பது அந்த அதிகாரியின் பணி ஆகும். இதற்காக, அந்த அதிகாரிக்கு ஓர் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம் மற்றும் பல சலுகைகள் கொடுக்கப்படும். அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள். தேவைப்பட்டால், 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஆசைப்படுபவர்கள் அரசு உயர் அதிகாரியாக ஒரு வருடமாவது வேலை பார்த்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், பொறியியல், கணிதம் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முக்கியமான கண்டிஷன் விண்ணப்பதாரர் அமெரிக்கராக மட்டுமே இருக்க வேண்டும்.
இச்செய்தியை நெட்டிசன்கள் சிலர் ஏலியன்களுடன் மோதி பூமியைக் காப்பாற்ற நாசா ஆள் தேடுகிறது என்று திரித்து பகிர்ந்து வைரலாக்கிவிட்டனர்.