ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க ரூ.25 சேவைக் கட்டணமா?: எஸ்.பி.ஐ. விளக்கம்
கடந்த சில நாட்களாக தனியார் வங்கிக்கு இணையாக வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகளை கொடுத்து வரும் பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி திடீரென நேற்று ஏடிஎம்-இல் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.25 கட்டணம் என்று அறிவித்தது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏடிஎம்ல் இருந்து நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானது என எஸ்.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாதம் ஒன்றுக்கு 4 முறைக்கு மேல் பிற ஏடிஎம்ல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் பரவியது.
ஆனால் இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி தற்போது விளக்கம் அளித்துள்ளது. நேற்று வெளியான செய்திகள் முற்றிலும் தவறானது என்று எஸ்.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எஸ்.பி.ஐ. வங்கி தரப்பில் கூறும் போது. ” ரூ.25 சேவைக் கட்டணம் வசூலிப்பு என்பது மொபைல் வாலட்டுக்கு மட்டும் தான் என்றும் ஏடிஎம்-இல் பணம் எடுப்பதற்கு அல்ல என்றும் கூறியுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ஏதிர்பார்க்கபடுகிறது.