நாடு முழுவதும் சோதனை சாவடிகள் மூடப்படும். மத்திய அமைச்சர் தகவல்

நாடு முழுவதும் சோதனை சாவடிகள் மூடப்படும். மத்திய அமைச்சர் தகவல்

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வந்தவுடன் நாடு முழுவதிலும் உள்ள பெரும்பாலான சோதனைச்சாவடிகள் மூடப்படும் என மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியுள்ளார்.

புதுடெல்லியில் நேற்று8 கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், ‘கால்நடை வளர்ப்பு, சுரங்கம் மற்றும் வனம் தொடர்பான சோதனைச் சாவடிகள் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தவுடன் மூடப்படும் என்றும் ஏனெனில் இவற்றை நடத்துவது காலத்தை வீணடிக்கும் செயல் என்பதால் மூடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜி .எஸ். டி வரிமுறை சுமார் 165 ஆண்டுகளாக உலகில் உள்ளது. முதன் முதலில் அது பிரான்ஸ்சில் நடைமுறைக்கு வந்தது என்றும் வெகு தாமதமாகத்தான் இந்தியாவிற்கு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சருக்கு முன் பேசிய வருவாய் செயலர் அஸ்முக் ஆதியா, ஜி எஸ் டி வரி முறை நடைமுறைக்கு வந்தப்பிறகு ஒரு சில சோதனைச் சாவடிகளே திறந்திருக்கும் என்றார். ஏனெனில் ஜி எஸ் டி வரிமுறையின் கீழ் பெரும்பாலான துறைகள் வந்துவிடுகின்றன என்றார்.

Leave a Reply