ராணிமேரி கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற உள அகில இந்திய ‘ஏ’ கிரேடு பெண்கள் கபடி போட்டி இன்று தொடங்குகிறது. ராணிமேரி கல்லூரியும், கபடி ஸ்டார் அமைப்பும் இணைந்து இந்த போட்டியை நடத்துகிறது. மைலாப்பூரில் உள்ள ராணிமேரி கல்லூரி வளாகத்தில் இந்த போட்டி வரும் 9ஆம் தேதி வரை நடைபெறும்,.
இந்த போட்டியில் கலந்துகொள்ள டெல்லி, அரியானா, மும்பை, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 66 அணிகள் கலந்து கொள்ள சென்னை வந்துள்ளன. லீக் மற்றும் ‘நாக்-அவுட்’ முறையில் போட்டிகள் நடைபெறும். போட்டிகள் ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியம் பட்டம் பெறும் அணிக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும், 2-வது மற்றும் 3வது இடம் பெறும் அணிகளுக்கு ரூ.60 ஆயிரம் மற்றும் ரூ.30 ஆயிரமும் வழங்கப்படும்.,
இன்று காலை 8 மணிக்கு கபடி போட்டியை அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.சுந்தரராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் நசிமுதீன், கல்லூரி கல்வி இயக்குனர் எம்.தேவதாஸ், தமிழ்நாடு கபடி சங்க தலைவர் சோலை எம்.ராஜா, ராணிமேரி கல்லூரி முதல்வர் ஆர்.அக்தர் பேகம், சென்னை மாவட்ட கபடி சங்க செயலாளர் கோல்டு ராஜேந்திரன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.