பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதில் இருந்தே நாள்தோறும் சில அதிரடி உத்தரவுகள் வந்துகொண்டேதன் இருக்கின்றது. அந்த வரிசையில் இன்று பிரதமர் இட்ட ஒரு உத்தரவில், ‘ மத்திய அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மொத்த விவரங்களை பிரதமர் அலுவலகத்திற்கு இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்திற்குள் அவரவர்களின் சொத்து மதிப்பை கண்டிப்பாக பிரதமருக்கு அறிக்கை ஒன்றின் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர்களோ அல்லது அவரது உறவினர்களோ ரூ.5000க்கு மேல் மதிப்புள்ள பரிசுப்பொருட்களை வாங்கக்கூடாது என்றும், அதற்கு மேல் மதிப்புடைய பரிசுப்பொருட்களை வாங்கினால் உடனடியாக அரசு கருவூலத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுளது.
மேலும் மத்திய அமைச்சர்கள் வெளியூர் செல்லும்போது முடிந்த அளவுக்கு சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும், ஆடம்பர பங்களாவில் தங்குவதை தவிர்த்துவிட்டு அரசு அல்லது அரசு சார்ந்த பொது நிறுவனங்கள் நடத்தும் ஓட்டல்களில் தங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.