நாளையே அனைத்துக் கட்சிகள் கூட்டம்: முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

நாளையே அனைத்துக் கட்சிகள் கூட்டம்: முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்த நிலையில் மத்திய அரசு இன்று இன்று வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அதில் காவிரி நதிநீரை பகிர்ந்து கொடுப்பதற்காக 10 பேர் கொண்ட குழுவை வரைவு செயல் திட்டத்தில் மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த குழுவிற்கு தண்ணீர் திறக்க முழு அதிகாரம் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்தை உடனே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்க்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது: காவிரி விவகாரத்தில் தொடர் கண்டனங்களிலிருந்து தப்பிக்க, தனது வரைவு திட்ட விவரங்களை மத்திய அரசு சமர்ப்பித்திருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தும் வகையில் நாளையே அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் கூட்டத்தை மாநில அரசு கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த கோரிக்கைக்கு இதுவரை தமிழக அரசு பதிலளிக்கவில்லை. அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply