வடமாநிலங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து! ரயில்வே துறை

இந்தியாவில் பாதுகாப்பு படைக்கான ஆள்சேர்ப்பு திட்டமாக அக்னிபாத் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டதிற்கு பீகார், உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி தாக்குதல் நடத்தியதால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ரயில்களுக்கு தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில் தெற்கு ரயில்வே அதிகார வரம்பிலிருந்து பீகார், கிழக்கு உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.