அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. பிரியங்கா காந்தியின் அதிரடியால் காங்கிரஸ் தொண்டர்கள் சோர்வு.

priyanka in politicsநான் அரசியலுக்கு வருவதாக ஊடகங்கள் கூறி வரும் கருத்து கற்பனையாக கருத்து என்றும் தான் இதுவரை அரசியலுக்கு வருவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்றும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் அலகாபாத் நகரில் பிரியங்கா காந்தி விரைவில் அரசியலுக்கு வரயிருப்பதாக ஒட்டப்பட்டிருந்த ஒரு சுவரொட்டியால் காங்கிரஸ் கட்சியிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரியங்காவுக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என்றும் அந்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி ஒன்றில், ”பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியில் இன்னும் தீவிரமாக இறங்க வேண்டும். என்றும் கட்சியில் முக்கிய பொறுப்பான பொதுச்செயலாளர் பதவியை அவருக்கு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பிரியங்கா காந்தியை அரசியலுக்கு அழைப்பதால் ராகுல் காந்தி மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார்.

சோனியா காந்தியின் தலைமையில், ராகுல்காந்தியின் துணைத்தலைமையில் பிரியங்கா காந்தி பொதுச்செயலாளராக பணியாற்றினால் கட்சிக்கு மேலும் வலு சேர்க்கப்படும் என்று கூறிய அவருடைய கருத்தை பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் ஆதரித்தனர்.

ஆஸ்கார் பெர்னாண்டஸ் கூறிய கருத்தின் காரணமாக பிரியங்காவுக்கு, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி அல்லது உத்தரபிரதேச மாநிலத்தின் தலைவர் பதவி ஆகியவற்றில் ஏதாவது ஒரு பதவி கொடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில், தன்னை பற்றி தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கும் அரசியல் சர்ச்சைகளுக்கு பிரியங்கா காந்தி முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, “நான் அரசியலுக்கு வருவது தொடர்பாக வெளியான தகவல்கள் அனைத்தும் கற்பனை என்றும் இந்த பிரச்னை கொண்டு வரப்பட்டுள்ள தருணமும் தவறுதலானது என்றும் கூறியுள்ள பிரியங்கா,இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை அனைவரும் ஊக்கப்படுத்தாமல் இருந்தால் அதற்காக அனைவருக்கும் நான் மிகுந்த நன்றி உள்ளவராக இருப்பேன்” என்று கூறியுள்ளார். பிரியங்கா காந்தியின் இந்த அறிவிப்பால் காங்கிரஸ் தொண்டர்கள் பெரிதும் சோர்வடைந்துள்ளனர்.

Leave a Reply