மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி. பேச்சுவார்த்தை தீவிர

maharastraசமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்ட்ரா சட்டமன்றத்  தேர்தலில் எந்தக்  கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், பாஜக 122 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்து வருகிறது. எனவே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக சிவசேனா அல்லது தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் தேர்தலுக்கு பாஜகவுடன் கருத்துவேறுபாடு கொண்டிருந்த சிவசேனா, தற்போது மீண்டும் பாஜகவுடன் தனது பழைய உறவை புதுப்பிக்க முன்வந்துள்ளது.

கூட்டணி ஆட்சி குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக கட்சியின் மூத்த தலைவர்களான அனில் தேசாய், சுபாஷ் தேசாய் ஆகியோர் டெல்லி விரைந்துள்ளனர்.
அவர்கள், பா.ஜ.க. தலைவர்கள் தர்மேந்திர பிரதான், சந்திரகாந்த் பட்டீல் ஆகியோரை சந்தித்துப் பேசி, பா.ஜ.க. ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக தெரித்துள்ளனர். தங்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே அவர்கள் விதித்ததாக கூறப்படுகிறது.

சிவசேனா கட்சிக்கு மூன்றில் ஒருபங்கு அமைச்சர்கள் பதவியுடன் துணை முதல்வர் பதவியும் வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த கட்ட பேச்சு வார்த்தை வருகிற 25ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் கூட்டணி ஆட்சி உறுதிப்படுத்தப்படும் என தவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply