ஆலு பாலக்

7a71fd24-d04e-4fcc-964e-16b669006276_S_secvpf

தேவையான பொருட்கள்  :

பாலக் கீரை – ஒரு கட்டு 
உருளைக்கிழங்கு – ஒன்று 
சின்ன வெங்காயம் – 10 
பச்சைமிளகாய் – 2 
தக்காளி – ஒன்று 
உப்பு – தேவையான அளவு 

தாளிக்க : 

கடுகு 
சீரகம் 
காய்ந்த மிளகாய் 
கறிவேப்பிலை 
எண்ணெய் 

செய்முறை :

• பாலக் கீரை மற்றும் உருளைக்கிழங்கை நறுக்கி வைக்கவும்.

• குக்கரில் கீரையுடன் நறுக்கிய தக்காளி, சின்ன வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து சிறிது உப்பு போட்டு 10 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்த கீரை ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுற்று விட்டு மசிக்கவும்.

• கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்.

• அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கவும்.

• உருளை வெந்ததும் மசித்த கீரையை சேர்த்து ஒரு கொதி வந்ததும் உப்பு சரி பார்த்து இறக்கவும்.

• சுவையான, எளிதாக செய்யக்கூடிய ஆலு பாலக் தயார்.

Leave a Reply