நேற்று டெல்லியில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராகுல்காந்தி, ‘சீக்கியர் கலவரத்திற்கும் குஜராத் கலவரத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாகவும், சீக்கியர் கலவரத்திற்காக எக்காரணத்தை முன்னிட்டும் மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை என்றும் கூறினார்.
வன்முறையை நிறுத்த பஞ்சாபில் சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது என்றும் ஆனால் குஜராத்தில் வன்முறையை அரசே ஏற்படுத்தியது என்றும் அவர் மேலும் கூறினார்.
காங்கிரஸ் ஜெயித்தால் பிரதமர் பதவியேற்க தயாரா? என்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ராகுல்காந்தி, காங்கிரஸ் தோல்வியுற்றால் கண்டிப்பாக தான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொளவதாக கூறினார்.
மேலும் அவர் தனது பேட்டியில் அரசியல் கட்சியின் அனைத்து விவரங்களையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கொண்டுவருவது சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எனினும் இதுகுறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்யவேண்டும் என்றும் கூறினார்.