சினிமாவா? குழந்தையா? முடிவு எடுக்க முடியாமல் அமலாபால் தவிப்பு

amalapaulநடிகை அமலாபாலுக்கும் இயக்குனர் விஜய்க்கும் வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. இந்நிலையில் அமலாபால் தற்போது மிலி என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அமலாபால், நேரம் படத்தில் ஹீரோவாக நடித்த நிவினுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நிவின் தனது மூன்று வயது குழந்தையையும் படப்பிடிப்பிற்கு தினசரி அழைத்து வருகிறார். அந்த குழந்தை அமலாபாலுடன் நெருங்கி பழகிவிட்டது. படப்பிடிப்பில் தன்னுடைய காட்சி இல்லாதபோது, அந்த குழந்தையுடன் தான் அமலாபால் விளையாடி வருகிறார். நிவின் குழந்தையும் அமலாபாலுடன் நெருங்கி பழகிவிட்டதாக கூறப்படுகிறது.

அமலாபாலுக்கு குழந்தை மேல் உள்ள ஆசையை புரிந்துகொண்ட இயக்குனர் விஜய், அமலாபால் திருமணத்திற்கு பின்னர் நடிக்க மாட்டார் என்றும் குழந்தை பெற்றுக்கொண்டு குடும்பத்தை கவனிப்பார் என்றும் கூறியுள்ளார். ஆனால் அமலாபாலுக்கு குழந்தை மேல் நிறைய ஆசை இருந்தாலும் உடனடியாக நடிப்பில் இருந்து வெளியேற விருப்பம் இல்லை. இந்த விஷயத்தில் அமலாபால் முடிவு எடுக்க முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply