அமரகாவியம். திரைவிமர்சனம்.

amarakaviyamபுதுமையாக ஒரு காட்சி கூட இல்லாமல் காதலுக்கு மரியாதை, காதல், பன்னீர் புஷ்பங்கள் போன்ற பல படங்களில் இருந்து காட்சிகளை சுட்டு அரைத்த மாவையை அரைத்து ஒரு மொக்கை படத்தை கொடுத்துள்ளார் ‘நான்’ பட இயக்குனர் ஜீவா ஷங்கர்.

பள்ளியில் படிக்கும் சத்யாவின் நண்பன் நாயகி மியாவை காதலிப்பது, நண்பனுகாக காதல் செல்லும் சத்யாவுக்கு நாயகி தன்னை காதலிப்பது தெரிந்து இன்ப அதிர்ச்சி ஆவது, பின்னர் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க மறுப்பது கடைசியில் சோகமான முடிவு என்ற உப்புசப்பில்லாத கதையுடன் களம் புகுந்துள்ளார் ஜீவா ஷங்கர். இந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்து நயன்தாரா கதறி கதறி அழுததாக செய்திகள் வெளிவந்தன. அவர் ஏன் அழுதார் என்பதற்கு படம் பார்த்த பிறகுதான் காரணம் தெரிந்தது. இப்படி ஒரு மொக்கை படத்தை பார்த்தால் யார்தான் அழுகாமல் இருப்பார்கள்?

ஹீரோ சத்யா மற்றும் ஹீரோயின் மியா தரப்பில் எவ்வித தவறும் இல்லை. கொடுத்த வேடத்தில் நிறைவாகவே நடித்துள்ளார்கள். படத்தில் அழுத்தமாகவும், புதுமையாகவும் ஒரு காட்சி கூட இல்லாததால் படம் பார்ப்பவர்கள் தியேட்டரில் நெளிகின்றனர். போதாக்க்றைக்கு ஜிப்ரானின் கேவலமான இசை. ஒளிப்பதிவு மட்டுமே படத்தின் பிளஸ். ஓம்பிரகாஷ் காட்சிகளை நன்றாக பதிவு செய்துள்ளார்.

கதை 1980களில் நடப்பதாக கூறும் இயக்குனர் அதற்குரிய ஒரு காட்சியை கூட வைக்கவில்லை. ஹீரோயின் உள்பட படத்தில் நடிப்பவர்களின் உடைகளுக்கும் 1980ஆம் ஆண்டுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. பின்னணியில் 1980ஆம் ஆண்டுகளில் வரும் இளையராஜாவின் பழைய பாடல்களை வைத்து இந்த படம் அந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமாம்.

மொத்தத்தில் அமரகாவியம் அழுதகாவியமாகத்தான் உள்ளது.

Leave a Reply