அமேசான் நிறுவனத்தில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள்: அதிரடி அறிவிப்பு

அமேசான் நிறுவனம் பண்டிகை காலத்தில் அதிக அளவு விற்பனையை கருத்தில் கொண்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது
பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவை செய்யவேண்டும் என்ற வகையில் இந்த வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்

சென்னை மும்பை டெல்லி கொல்கத்தா பெங்களூர் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் பண்டிகை சீசன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் இவர்களில் திறமையானவர்கள் நிரந்தரமாக்க படுவார்கள் என்றும் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது

அமேசான் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் சென்னை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.