லஞ்ச விவகாரத்தில் ஆம்பூர் டிஎஸ்பி கைது. பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

லஞ்ச விவகாரத்தில் ஆம்பூர் டிஎஸ்பி கைது. பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

ஆம்பூர் டி.எஸ்.பி தன்ராஜ் மீது பல லஞ்சப் புகார்கள் அடுக்கடுக்காக வந்த நிஅலியில் நேற்று அவர் பொறி வைத்து பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

மணல் லாரி ஓட்ட ரூ 1 லட்சத்து 20 ஆயிரத்துடன் பொங்கல் போனஸ் வாங்கிய ஆம்பூர் டிஎஸ்பி தன்ராஜ், உதவி ஆய்வாளர் லூர்து ஜெயராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பொறிவைத்து பிடிக்கப்பட்டு கைது செய்த செய்தி வெளியே கசிந்தவுடன் அப்பகுதி மக்கள் இந்த சம்பவத்தை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்த நிலையில் லஞ்ச விவகாரத்தில் கைதான ஆம்பூர் டிஎஸ்பி தன்ராஜ்க்கு சொந்தமான ஆழ்வார்பேட்டை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி குமரகுரு தலைமையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply