மொரீஷியஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக பிரபல விஞ்ஞானி அமின குரிப் ஃபாக்கிம் (Ameenah Gurib-Fakim) என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை அதிபராக இருந்த கைலாஷ் பூர்யாக் கடந்த வெள்ளியன்று நீக்கப்பட்டதை அடுத்து அமினா இந்த பதவிக்கு தேர்வுக்கு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1968ஆம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற மொரிஷீயஸ் தீவில் தற்போதுதான் முதல் பெண் அதிபர் பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமினாவுக்கு ஆளுங்கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் அவருடைய பதவி உறுதியாகியுள்ளது.
இவருடைய நியமனம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வியாழன் அன்று வெளியாகும் என்றும் வரும் வெள்ளியன்று அமினா, மொரிஷியஸ் தீவின் முதல் பெண் அதிபராக பதவியேற்பார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.