ஈராக்கில் அரசுக்கு எதிராக போராடி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நேற்று முன் தினம் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரை கடத்தி சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்த கொடூர கொலையை வீடியோ எடுத்த தீவிரவாதிகள், அதை யூடியூப் இணையதளத்திலும் பதிவு செய்தனர். இந்த வீடியோவில் முகமூடி அணிந்து பேசிய தீவிரவாதி ஒருவர், ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும், ஈராக்கின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டால் இதுபோன்ற தண்டனைகள் தொடரும் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோவை யூடியூப் இணையதளம் தடை செய்துள்ளது. இந்த சம்பவம் காரணமாக அமெரிக்கா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ஃபோலி என்ற பத்திரிகையாளர் கடந்த பத்து வருடங்களாக ஈராக் நாட்டில் தங்கியிருந்து அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்றுக்காக செய்திகள் சேகரித்தும், புகைப்படங்கள் அனுப்பியும் வருகிறார். இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னார் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு நேற்று முன் தினம் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலைக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் இங்கிலாந்து பிரதமர் கேமரூன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவில் பேசிய தீவிரவாதி பிரிட்டன் ஆங்கிலம் பேசியதால் அந்த தீவிரவாதி பிரிட்டனை சேர்ந்த ஜிகாதி தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1pgEFjC” standard=”http://www.youtube.com/v/O_Tb210pPqk?fs=1″ vars=”ytid=O_Tb210pPqk&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep4084″ /]