1968ஆம் ஆண்டு காணாமல் போன அமெரிக்க ராணுவ வீரர் வியட்நாமில் கண்டுபிடிப்பு.

[carousel ids=”33273,33274,33275,33276″]

44 வருடங்களுக்கு முன்னர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர், தற்போது வியட்நாமில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் உயிர் வாழ்வதாக அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

1968ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் மிகவும் ரகசியமான தொழில்நுட்பம் ஒன்றை ஹெலிகாப்டரில் எடுத்து சென்ற அமெரிக்க வீரர் திடீரென விபத்தில் சிக்கி வியட்நாமின் காட்டுப்பகுதியில் பலத்த காயங்களுடன் கிழே விழுந்துள்ளார். அவரிடம் உள்ள தொழில்நுட்பத்தை அறிய வியட்நாம் ராணுவம் அவரை சித்திரவதை செய்துள்ளது.

ஆனால் கீழே விழுந்த அதிர்ச்சியில் அவர் தன் பழைய நினைவுகளை இழந்துள்ளார். அவர் யார் என்பதையும், அவரது பெயர் மற்றும் மொழியைக்கூட அவரால் ஞாபகப்படுத்தி சொல்ல முடியவில்லை. பின்னர் அவரை காட்டுப்பகுதியிலேயே தனியாக விட்டுவிட்டனர். 44 வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்த அவரை அமெரிக்காவை சேர்ந்த ரகசிய உளவாளிகள் தற்போது கண்டுபிடித்து அவரை மீண்டும் அமெரிக்காவிற்கு அழைத்து வந்து அவருடைய உறவினர்களுடன் சேர்த்துள்ளனர்.

டி.என்.ஏ பரிசோதனை மூலம் இவர்தான் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நபர் என்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். மரணம் அடைந்ததாக அமெரிக்க அரசால் அறிவிக்கப்பட்ட ஒருவர் மீண்டும் திரும்பி வந்ததை கண்டு அவருடைய உறவினர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply