அமெரிக்காவில் வேட்டி கட்டி விமானம் ஓட்டும் தமிழன்: நெட்டிசன்கள் பாராட்டு

அமெரிக்காவில் வேட்டி கட்டி விமானம் ஓட்டும் தமிழன்: நெட்டிசன்கள் பாராட்டு

தமிழர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்று வேட்டி. என்னதான் கோட், சூட் போட்டாலும் வேட்டிக்கு என்று ஒரு மரியாதை இன்றும் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் விமானியாக பணியாற்றும் தமிழர் ஒருவர் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் வேட்டி அணிந்து விமானம் ஓட்ட அனுமதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அமெரிக்காவில் விமானத்தை ஓட்ட என்னுடைய பாரம்பரிய உடையான வேட்டியுடன் தான் வருவேன் என்று கூறி மேலதிகாரிகளிடம் சண்டை போட்டு தற்போது அனுமதி வாங்கியுள்ளார் விமானியும் தமிழருமான் ரவிகரன் ரணேந்திரன் என்பவர்.

வேட்டி அணிந்து விமானத்தை இயக்க இவர் ரன்வேயில் நடந்து செல்லும் புகைப்படம் தற்போது உலக அளவில் வைரலாகியுள்ளது. பெரும்பாலான தமிழ் நெட்டிசன்கள் ரவிகரனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply