இந்திய வம்சாவளி பேராசிரியைக்கு அமெரிக்காவின் உயரிய விருது

அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண் ஒருவருக்கு அமெரிக்க அரசின் உயரிய விருதான ராபர்ட்பாஸ்டர்ஷெர்ரி விருதும், ரூ.1.5 கோடி பரிசும் கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள மிசெளரி பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளி பெண் மீராசந்திரசேகர் என்பவர் இயற்பியல் மற்றும் வானசாஸ்திர பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய சீரிய பணியை பாராட்டி அமெரிக்க அரசு அவருக்கு அரசின் மிக உயர்ந்த விருதானராபர்ட்பாஸ்டர்ஷெர்ரி என்று விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விருதுடன் ரூ.1.5  ரொக்கத் தொகையும் மீராசந்திர சேகருக்கு கிடைக்கும்.

மைசூரை சேர்ந்த மீராசந்திரசேகர் மைசூர் எம்.ஜி.எம் கல்லூரியில் பட்டப்படிப்பு,, சென்னை ஐ.ஐ.டியில் பட்ட மேற்படிப்பும் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அமெரிக்காவில் உள்ள பிரெளன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஏற்கனவே இவர் பல்வேறு அமெரிக்க விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply