அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்கில் உள்ள இடம்தான் மிக்கி பேசின். இந்த இடம் சூரியனின் வெப்பத்தால் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம். பில் மில்லர் என்கிற ராணுவ அதிகாரி இந்த இடத்தை குட்டி விமானம் மூலம் கடந்து செல்கையில் 13.3 மயில் சதுர அளவுக்கு வரி வரியாக வரைபடம் போன்ற ஒன்றை கண்டார்.
அந்த வரிவரியான வரை படம் வெறு ஒன்றும் இல்லை இந்து மதத்தில் கால காலமாக வணங்கி வரும் ஸ்ரீசக்கரம். இந்த பகுதியை ஆய்வு செய்ததில் இந்த பகுதியில் சுற்றிலும் மனித நடமாட்டத்திற்க்கான தடயமே இல்லை என்று கூறுகிறார்கள் அதாவது அந்த இடத்தில வாகனங்களின் டயர் அச்சுக்களோ, மனித கால்களின் தடையமோ இல்லை என்று கூறுகிறார்கள். மேலும் இதை ஒரு மனிதனால் வரைவதற்கு சாத்தியமே இல்லை என்று தெரிவித்துள்ளார்கள். அப்படியே இதை ஒரு இயந்திரத்தின் மூலம் இந்த வரைப்படத்தை வரைந்திருந்தால் அந்த இயந்திரத்தை பயன்படுத்தியதின் தடையம் இந்த இடத்தில் கண்டிப்பாக இருந்திருக்கும் ஆனால் அதற்க்கான எந்த தடையமும் இங்கே இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சி செய்தவர்கள். இந்த சக்கரத்தின் மொத்த சுற்றளவு 13.3 மையில்கள். இதில் ஆச்சிரியம் என்னவென்றால், இந்த 13.3 மையில்களில் உள்ள வரைப்பட கோடுகளின் அளவு 10 இன்ச் அகலமும், 3 இன்ச் ஆழமும் ஆகும் இந்த அளவு ஒரே சீறாக 13.3 மயில்களும் உள்ளதாம். இப்படி 13.3 மயில்கள் ஒரே சீறாக மனிதன் வரைய சாத்தியமே இல்லை என்று கூறுகிறார்கள். இப்படி வரைவதற்கு ஒரு உயர்ரக இயந்திரத்தினாலேயே முடியும் ஆனால் அப்படி ஒரு இயந்திரம் பயன்படுத்தியதற்க்கான தடையமே இங்கு இல்லை என்கிறார்கள். இதை யார் செய்தது என்று கண்டுப்பிடிக்க முடியவில்லை என்றும், இதை உருவாக்கியவர்கள் நம்பமுடியாத அளவுக்கு திறமை படைத்தவர்களாக இருப்பார்கள் என்று ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றனர்
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1Be9cCl” standard=”http://www.youtube.com/v/KliBRinZHJA?fs=1″ vars=”ytid=KliBRinZHJA&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep9352″ /]